Categories
உலக செய்திகள்

பரபரப்பு…!! “கத்தியால் குத்தி” கொடூரமாக கொல்லப்பட்ட பள்ளி மாணவி… தலைமறைவான சக மாணவன் கைது…!!

கனடாவில் பள்ளி மாணவியை சக மாணவன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான்.

முன்பெல்லாம் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இடையே பிரச்சனை ஏதும் வந்தால் அது பள்ளியிலே முடிந்துவிடும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் அப்படி இல்லை.  இரண்டு மாணவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டால் அது பள்ளியிலேயே முடிவதில்லை. ஒருவர் மற்றொருவரை  இணையம் மூலம் மிரட்டுவது வீட்டை விட்டு வெளியே வரச்சொல்லி கொலை செய்வது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பிரான்சில் உள்ள ஒரு மாணவியை சக மாணவியும், மாணவனும்  சேர்ந்து கொலை செய்து ஆற்றில் வீசியுள்ளனர். தற்போது அதே போன்று கனடாவிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கனடாவில் உள்ள ஒரு பள்ளியில் Jennifer Winkler என்ற 17 வயது மாணவி படித்து வந்தார்.

இந்நிலையில் Jennifer-ஐ  அவருடன் படிக்கும் மாணவர் ஒருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த  Jennifer உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால்  சிகிச்சை பலனின்றி Jennifer பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் Jennifer-ஐ கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய மாணவன் பள்ளிக்கு அருகில் இருந்த ஒரு இடத்தில் மறைந்து இருந்துள்ளார். அதனை பார்த்த காவல்துறையினர் மாணவனை  கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நடந்ததால் அந்த பள்ளி மூடப்பட்டு உள்ளது. மேலும் கொலை குறித்து மாணவனிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |