கனடாவில் உள்ள டொரோண்டோ நகரில் நடப்பு ஆண்டின் ஜூலை மாதம் வரை வெளிப்புற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கனடாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக கனடா தினத்தையொட்டி நடைபெற இருந்த அணிவகுப்புகள், திருவிழாக்கள், வானவேடிக்கைகள் மற்றும் வெளிப்புற நிகழ்வுகள் போன்றவை ஜூலை 1 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் டொரோண்டோ நகர அரசு நிர்வகிக்கும் சாலைகள், பூங்காக்கள், பொது இடங்களில் நடத்தப்படும் திருவிழாக்களில் பொது மக்கள் ஒன்று கூடுவதற்கும் அந்நகர அரசு தடை விதித்துள்ளது.
டொரோண்டோ நகரின் சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் அவசர உதவி மையம், காவல்துறையினர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என அனைவருடனும் கலந்து ஆலோசனை செய்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று டொரோண்டோ நகர அரசின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.