Categories
மாநில செய்திகள்

ஏப்ரல், மே மாதத்தில் நடக்கவிருந்த அனைத்து பொறியியல் தேர்வுகளும் ரத்து: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

பொறியியல் மாணவர்களுக்கான அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல், மே-ல் தேர்வுகள் நடக்காது என தமிழக அரசு நேற்று அறிவித்ததை தொடர்ந்து அண்ணா பல்கலைக் கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலை. தெரிவித்துள்ளது. நேற்று உயர்கல்வித்துறை கல்லுரிகளில் இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கான தேர்வுகள் அடுத்த செமஸ்டரின் தொடக்கத்தில் நடத்தப்படும் என அறிவித்தது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

மேலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 2ம் கட்டமாக நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், பள்ளி மாணவர்கள் தேர்வுகள் இன்றி அடுத்த வகுப்புகளுக்கு உயர்த்தப்பட்டனர். இந்த நிலையில், நடப்பு ஆண்டின் கல்லூரி இறுதி பருவத் தேர்வுகள் அடுத்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அறிவித்திருந்தது. இதுகுறித்து உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு ஆண்டின் கல்லூரி இறுதி பருவத் தேர்வுகள் அடுத்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் நடக்கப்படும்.

அதாவது ஜூன் மாதத்தில் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட பின்னர் முந்தைய பருவத் தேர்வுகள் நடைபெறும் எனவும் அதன்பின்னர் அடுத்த கல்வி ஆண்டின் பாட வகுப்புகள் தொடங்கும்’ என்று கூறப்பட்டிருந்தது. தமிழக அரசின் அறிவிப்பிற்கு பிறகு ஏப்ரல் மே மாதத்தில் நடைபெறவிருக்கும் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதேபோல, கல்லூரிகளில் கடைசி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் தேர்வு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் மாதத்திலேயே முடிவுகளை வெளியிட உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

Categories

Tech |