முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்ற மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாகவும், வருமானத்திற்கு அதிகமாக 58 கோடி ரூபாய் அளவிற்கு சொத்துக்கள் சேர்த்ததாகவும் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரால் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் எஸ்.பி வேலுமணி தரப்பில் இரண்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குககளை நீதிபதிகள் பி.என் பிரகாஷ் மற்றும் ஆர்.எம். டீக்காராமன் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த விசாரணையின் போது எஸ் பி வேலுமணி தரப்பில் வைக்கப்பட்ட வாதம் என்னவென்று சொன்னால் ? தனக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார்களில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்று ஏற்கனவே இது சம்பந்தமாக ஆரம்ப கட்ட விசாரி நடத்திய எஸ. பி பொன்னி அளித்த அறிக்கையின் அடிப்படையில், வழக்கை கைவிடுவது என்று 2020 ல தமிழக அரசு முடிவு எடுத்த நிலையில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு உள்நோக்கத்துடன் இந்த வழக்கானது பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது. அதேபோல சொத்து குவிப்பு வழக்கு என்பது மற்றவர்கள், தனக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள் சொத்துக்களை தனது சொத்துக்களாக கணக்கிட்டு இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதனால் அந்த வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் என்று வேலுமணி தரப்பில் வாதிடப்பட்டது.
புகார்தாரரான அறப்போர் இயக்கத்தின் சார்பில், குறிப்பிட்டு குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறது. அந்த புகார்கள், அதற்கு ஆதாரங்களாக ஏராளமான ஆவணங்களும் இருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டன. அரசியல் உள்நோக்கத்தோடு இந்த வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்று அரசு தரப்பிலும் வாதிடப்பட்டது. இவை அனைத்து வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கில் இன்றைக்கு தீர்ப்பளித்து இருக்கிறார்கள்.
எஸ்.பி வே;லுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை பொறுத்தவரைக்கும் வேலுமணி மீதான வழக்கை மட்டும் ரத்து செய்வதாக நீதிபதிகள் தீர்ப்பளித்திருக்கிறார்கள். அதேசமயம் சொத்து குவிப்பு வழக்கு ரத்து செய்ய கேட்ட எஸ்.பி வேலுமணி தரப்பில் தாக்கல் செய்யபட்ட மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறார்கள். அந்த வழக்கை அவரை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.