தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு கட்டண வரைமுறை தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு நிர்ணயம் செய்யப்படும் நிலையில், அந்த கட்டணத்தை விட அதிக அளவில் கல்லூரிகள் கட்டணம் வசூலிப்பதாக 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாநில சுகாதாரத் துறை மற்றும் மருத்துவ கல்வி துறையை அணுகி புகார் கொடுத்துள்ளனர்.
இதன் காரணமாக டாக்டர் எம்ஜிஆர் மருத்துவமனையின் கீழ் இயங்கி வரும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கு மாநில சுகாதாரத் துறை செயலர் செந்தில்குமார் அவசர கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, நடப்பு கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு கல்வி கட்டணமானது 1 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் 4.35 லட்சம் ரூபாய் முதல் 4.5 லட்சம் ரூபாய் வரை கல்வி கட்டணமாக செலுத்த வேண்டும்.
அதன் பிறகு நிர்வாக ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு 13.5 லட்சம் கட்டணமும், என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் 24.5 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். இதில் கல்வி கட்டணம், சேர்காகை கட்டணம், சிறப்பு ஆய்வக கட்டணம், இணையதள பயன்பாடு மற்றும் விளையாட்டு கட்டணம் போன்றவைகள் அடங்கும்.
இதில் உணவக கட்டணம் சேர்க்கப்படாத நிலையில், கல்லூரி வளர்ச்சிக்காக 40,000 ரூபாய் வரை மாணவர்களிடம் கட்டணமாக பெற்றுக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை மீறி அதிக கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது ஆன்லைன் கவுன்சிலிங் மூலமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.