Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

LED டிவிக்களின் மீதான வரி ரத்து … மத்திய அரசின் அதிரடி முடிவு ..!!

இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் LED டிவிக்களின் வரி ரத்து செய்யப்பட்டுள்ளதால், அதன் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2017-ம் ஆண்டு  வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் எல்.இ.டி. டி.வி. சாதனங்களுக்கு மத்திய அரசு 5 சதவிகிதம் வரி விதித்து வந்தது. ஆகையால், இந்த இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்று தொலைக்காட்சி பெட்டி தயாரிப்பாளர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். எனினும், எல்.இ.டி. டி.வி.யில் பொருத்தப்படும் பல நவீன கருவிகள் மீது மத்திய அரசு வரி விதித்து இருந்தது.

Image result for led tv

அதனால் அதையும் நீக்க வேண்டும் என்று தொலைக்காட்சி பெட்டி தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் இந்தியாவின் பொருளாதார மந்த நிலையை கருத்தில் கொண்டு மத்திய நிதி அமைச்சகம் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எல்.இ.டி. டி.வி.க்கள் மீதான 5 சதவிகித வரி விதிப்பு நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Image result for led tv

இதன் மூலம் இனி வெளிநாடுகளில் இருந்து எல்.இ.டி. டி.வி.க்களை எந்தவித கூடுதல் கட்டணமும் இல்லாமல் தயாரிப்பாளர்கள் இறக்குமதி செய்ய முடியும். மேலும், எல்.இ.டி. டி.வி. மீதான 5 சதவிகித இறக்குமதி வரி நீக்கப்பட்டு விட்டதால் இந்தியாவில் உள்ள தொலைக்காட்சி பெட்டி தயாரிப்பாளர்கள், தொலைக்காட்சி விற்பனையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் தங்களுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாயை நுகர்வோர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளனர்.

 

Image result for led tv

 

 

எனவே இனி எல்.இ.டி. டி.வி. விலை கணிசமாக குறைய வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக 4 சதவிகிதம் அளவுக்கு விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, நாடு முழுவதும் நவராத்திரி, தீபாவளி ஆகிய பண்டிகை நாட்கள் அடுத்தடுத்து வர உள்ளதால், இந்த நேரத்தில் எல்.இ.டி. டி.வி. விலை குறையும் பட்சத்தில் அதிக அளவு தொலைக்காட்சி பெட்டிகளை விற்பனை செய்ய முடியும் என்று வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |