கடகம் ராசி அன்பர்கள்….!! இன்று எதிர்மறையாக பேசுபவர்களிடம் இருந்து கொஞ்சம் விலகி இருப்பது நல்லது. கொடுக்கல்-வாங்கலில் மிகவும் கவனமாக தான் இன்று செயல்பட வேண்டும். யாருக்கும் எந்தவித ஜாமீன் கையெழுத்தும் போடவேண்டாம். இன்று எதிர்பாராத வகையில் சில சம்பவங்கள் நடக்கும். பணவரவும் வந்து சேரும். சிலருக்கு புதிய ஆடை ஆபரணம் வாங்கும் யோகம் கிடைக்கும். சகோதர வகையில் செலவுகள் இருக்கும் குடும்பத்தார் வகையிலும் செலவுகள் இருக்கும். இன்று ஓரளவே மகிழ்ச்சி காணப்படும்.
அரசாங்க வழியில் எதிர்பார்க்கும் காரியம் அனுகூலமாகவே முடியும். வியாபாரத்தில் லாபம் ஓரளவு கிடைக்கும். யாருக்கும் இன்று பஞ்சாயத்துக்கள் ஏதும் செய்ய வேண்டாம். வாடிக்கையாளரிடம் கொஞ்சம் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள். பேசும்பொழுது நிதானத்தை கடைபிடியுங்கள். அக்கம்பக்கத்தார் இடம் கொஞ்சம் கூடுமான அளவு அன்பாக நடந்து கொள்வது ரொம்ப நல்லது. இன்று எதிர்பார்க்க கூடிய வகையில் காரியங்கள் சிறப்பாக நடப்பதற்கு இறையருள் கண்டிப்பாக வேண்டும். முடிந்தால் இன்று ஆலயம் சென்று வாருங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை :மேற்கு
அதிர்ஷ்ட எண் :3 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை