ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடரில் புற்றுநோயை உண்டாக்கும் ஆஸ்பெஸ்டாஸ் கலந்திருப்பதை அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு மையம் கண்டுபிடித்துள்ளது.
அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட 103 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் மருந்து பொருட்கள் மற்றும் அழகு சாதனப்பொருட்கள் உள்ளிட்ட பல தயாரிப்புகளை வழங்கி வருகிறது. ஆனால் குழந்தைகளுக்கான சோப்பு , ஷாம்பு , பவுடர் , லோசன் உள்ளிட்ட தயாரிப்புகள் தான் உலக அளவில் இந்நிறுவனத்திற்கு பெயர் பெற்றுத் தந்தது. அதேநேரம் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாக அந்நிறுவனத்தின் மீது ஆயிரக்கணக்கான நுகர்வோர்கள் வழக்குகள் தொடர்ந்தனர்.
இந்த நிலையில் ஜான்சன் அன்ட் ஜான்சன் பேபி பவுடரில் புற்றுநோயை உருவாக்கக்கூடிய ஆஸ்பெஸ்டாஸ் கலந்திருப்பதாக அமெரிக்க மத்திய மருந்து கட்டுப்பாட்டு மையம் கண்டுபிடித்துள்ளது.ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஒரு தொகுப்பில் ஆஸ்பெஸ்டாஸ் இருப்பதாகவும் , மற்றொரு தொகுப்பில் ஆஸ்பெஸ்டாஸ் கலப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆஸ்பெஸ்டாஸ் கலப்பு உள்ள தொகுப்பிலிருந்து ஜான்சன் அன்ட் ஜான்சன் பேபி பவுடரை நுகர்வோர்கள் பயன்படுத்த வேண்டாம் எனவும் அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு மையம் எச்சரித்துள்ளது.
இதையடுத்து ஆய்வின் முடிவுகளை ஏற்றுக் கொண்ட அந்நிறுவனம் 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 33 ஆயிரம் பவுடர் டின்களை திரும்பப் பெற்றுக்கொள்வதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது . இதனால் நாடும் முழுவம் அதை பயன்படுத்திவந்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.