புதுச்சேரியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நடைபெற்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிக்கொடை வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற பின்னர், திரைப்பட நடிகை கவுதமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய மருத்துவ நிபுணர்கள் நம் நாட்டில் மிகக் குறைவாக இருக்கின்றனர். அதனை அரசாங்கம் நிவர்த்தி செய்ய வேண்டும்.
புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிக் கொடை என்பது மிகவும் தேவைப்படும் ஒன்றாகும். அம்முடியைக் கொண்டு அவர்களுக்கு ’விக்’ செய்து வழங்குவதால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவர். இதனை அனைவரும் செய்ய முன்வரவேண்டும் “ என்றார். முன்னதாக, புற்று நோயாளிகளுக்கு முடிக் கொடை அளித்த 379 பேருக்கு பாராட்டு தெரிவித்து நடிகை கௌதமி சான்றிதழ் வழங்கினார்.