தனது பேச்சாற்றலால் அனைவரையும் கவரக்கூடிய கடகராசி அன்பர்களே..!! இன்று திட்டமிட்டபணி நிறைவேறி தகுந்த நன்மையை கொடுக்கும். தொழில் வியாபார வளர்ச்சி இன்று வியத்தகு அளவில் இருக்கும். நல்ல முன்னேற்றம் ஏற்படும் உபரி பண வருமானம் கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் சலுகை விலையில் வாங்குவார்கள். இன்று உங்களது செயல்களுக்கு மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் நல்ல மதிப்பை பெறுவீர்கள். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாக முடியும். எந்த விஷயத்திலும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது.
இன்று நீங்கள் மனம் மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். கூடுமானவரை பாடத்தில் கவனம் செலுத்திப் படியுங்கள். அது போதும் படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைகுட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பை கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்