கடகம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் பேச்சில் சாமர்த்தியம் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற்று புதிய இலக்கை அடையும். உபரி பண வருமானம் கிடைக்கும். நீண்டகால பணக் கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். விருந்து விழாவில் கலந்துக் கொள்வீர்கள். இன்று எந்த ஒரு காரியத்திலும் லாபம் நஷ்டம் பார்ப்பீர்கள். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கக்கூடும். மனக்குழப்பம் கொஞ்சம் இருக்கும். பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. அடுத்தவருடன் சில்லறை சண்டைகள் ஏற்படக்கூடும். அந்த விஷயத்திலும் கவனமாக இருங்கள். மாணவர்கள் பாடங்களில் சந்தேகம் கேட்பதற்கு தயக்கம் காட்டாமல் இருந்தால் வெற்றி இருக்கும்.
வாகனங்களில் செல்லும் போது கொஞ்சம் கவனமாக பொறுமையாக செல்லுங்கள். தொலைபேசி வழித் தகவல் உங்களுக்கு இன்று நல்ல தகவலாக இருக்கும். அதனால் மகிழ்ச்சி கொள்வீர்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது, முக்கியமான காரியத்திற்கு செல்லும் போது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். இன்று செவ்வாய் கிழமை என்பதால் முருக பெருமானை வழிபட்டு இன்றைய நாளை தொடங்குங்கள் அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்