கடகம் ராசி அன்பர்களே..!! இன்று அன்னை நலத்தில் அக்கறை கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். அதிக உழைப்பின் காரணமாக தூக்கம் குறைவதால் உடல் நலம் கெடலாம். உடல் நலத்தை மட்டும் சிறப்பாக பாதுகாத்திடுங்கள். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். இன்று உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள் மனம் அமைதி பெறுவதற்கு உதவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வரவுகள் எதிர்பார்த்த அளவு இருக்காது. கொஞ்சம் பொறுமையாக தான் செயல்பட வேண்டும். இன்று கணவன் மனைவிக்கு இடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட கூடும். பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு நடப்பது மட்டும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உங்களுடைய சாமர்த்தியமான பேச்சு மூலம் காரிய வெற்றி உண்டாகும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் இருக்கட்டும். யாரிடமும் வாக்குவாதத்தை தவிர்ப்பது மிகவும் நன்மையை கொடுக்கும்.
இன்று அக்கம்பக்கத்தில் பேசும்போது கவனமாக பேசுங்கள். நிதானமாக நடந்துகொள்ளுங்கள். இன்று வாடிக்கையாளரிடம் நீங்கள் கவனமாக நடந்து கொள்ளுங்கள். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். சக மாணவருடன் பழகும் போது மட்டும் கொஞ்சம் கவனமாக பழகுங்கள். தேவையில்லாத விஷயங்களுக்காக சண்டை போடவேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள். பொறுமையை கையாளுங்கள் அது போதும். இன்று நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும். இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்களை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்குங்கள் சிறப்பாக இருக்கும். உங்களுடைய தோசங்கள் அனைத்தும் நீங்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்