Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு… “மனம் நிம்மதியாகவே இருக்கும்”… திட்டங்களை தீட்டி கொள்வது நல்லது..!!

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று எதையும் யோசித்தும் இறைவனை பூஜித்தும்  செயல்படும் நாளாக இருக்கும். விரயங்கள் கூடும். அதிகாலையிலேயே பிரச்சனைகள் கொஞ்சம் உருவாகக்கூடும் பார்த்துக் கொள்ளுங்கள். பொறுமையாக  நடந்து கொள்ளுங்கள். வேலையாட்களிடம் போராடி வேலைகளை வாங்கும் சூழ்நிலை உருவாகும். இன்று எந்த ஒரு சின்ன வேலைக்காகவும் நீங்கள் பாடுபட வேண்டியிருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் இருக்கும். பயணங்களின்போது கவனம் இருக்கட்டும். மாணவர்கள் சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொண்டு படிப்பது நல்லது.

இன்று நட்பு வட்டம் விரிவடையும். இருந்தாலும் நண்பர்கள் மத்தியில் உங்களுக்கு சின்ன சின்ன பிரச்சினைகள் எழக்கூடும். உடல் ஆரோக்கியத்தை கொஞ்சம் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். பயணங்கள் மூலம் வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும். மனதில் இனம்புரியாத கவலை வந்து செல்லும். ஆன்மீகத்தில் கவனத்தைச் செலுத்தினால் இன்று மனம் உங்களுக்கு நிம்மதியாகவே இருக்கும்.அதுபோலவே குடும்பத்தாரின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். சகோதர வகையில் நன்மை ஏற்படும். இன்று நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது கொஞ்சம் கவனம் இருக்கட்டும். பார்த்துக்கொள்ளுங்கள்.

வெளிவட்டாரத்தில் உங்களுக்கு மதிக்கும் படியான சூழல் இருக்கும். அதுபோல தனவரவு இன்று ஓரளவு கால தாமதத்துடன் தான் கிடைக்கும். அதற்கு ஏற்றால் போல் திட்டங்களை தீட்டி கொள்வது நல்லது. இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக அமையும். அதுமட்டுமில்லை காலையில் நீங்கள் எழுந்ததும் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை இன்று வைப்பது மிகவும் சிறப்பு. இந்த அன்னம் உங்கள் வாழ்க்கையை மிகப்பெரிய அளவில் மாற்றும். கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |