கடகம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர்பாராதவிதமாக நன்மைகள் நடக்கக்கூடும். அதாவது அதிர்ஷ்டமான வாய்ப்புகள் கிடைக்க கூடும். வெளியூர் பயணங்களில் மட்டும் கவனமாக இருங்கள். குழந்தைகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படலாம். எவ்வளவு திறம்பட நீங்கள் செயல்பட்டாலும் உங்களுடைய திறமைகள் மட்டும் பாராட்டுக்களைப் பெறாது. இன்று மன உறுதி கொஞ்சம் வேண்டும். பழைய சொத்துகளை அடைவதில் கொஞ்சம் காலதாமதம் ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். உயர்நிலையில் உள்ளவருடன் மனவருத்தம் ஏற்படும் படியான சூழ்நிலை கொஞ்சம் வரலாம். மனைவி வழியில் உங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். அதே போல் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். வயிற்று உப்புசம் போன்ற பிரச்சினைகள் இருக்க கூடும். சரியான உணவை மட்டும் தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.
இன்று வாகனத்தில் செல்லும் போது கொஞ்சம் கவனமாக செல்லுங்கள். வாகன செலவும் இன்று இருக்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். தொழில் வியாபாரமும் நல்லபடியாக நடக்கும். கொடுக்கல் வாங்கலில் மட்டும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். அதேபோல பழைய நண்பர்களை நீங்கள் சந்திக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். அதன் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். முடிந்தால் இன்று ஆலயம் சென்று வாருங்கள் மனம் நிம்மதியாக இருக்கும். அதுபோலவே இன்று வெளியில் நீங்கள் செல்லும் பொழுது மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். காரியங்கள் சிறப்பாக நடக்கும். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாடு உங்களுக்கு சிறப்பை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் விநாயகரை வழிபட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்