Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடகம் இராசிக்கு… “பேசும்பொழுது நிதானத்தை கடைபிடியுங்கள்”… இரவு நேரப் பயணம் வேண்டாம்..!!

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று கௌரவக் குறைவு ஏற்படாமல் இருக்க சிறப்பாக செயல்படுவது நல்லது. பேசும்பொழுது நிதானத்தையும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை வேண்டும். துன்பம் வந்தபோதிலும் சிரிக்கக் கற்றுக் கொண்டவர்கள் நீங்கள். ஆகையால் எந்த விஷயத்தையுமே யோசித்து செய்யுங்கள். இன்று தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகக் கூடும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் மெத்தனப் போக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் ஏற்படலாம் பார்த்துக் கொள்ளுங்கள்.

இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. அப்படியே பயணம் செய்வதாக இருந்தாலும் பொருட்களின் மீதும் கொஞ்சம் கவனமாக இருங்கள். சொந்த பந்தங்களின் வீட்டு விஷேசங்களை முன் நின்று நீங்கள் நடத்துவீர்கள். அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். மாலை நேரங்களில் கேளிக்கை போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடிய வாய்ப்புகளும் இருக்கும். இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாக இருக்கும். மாணவர்கள் மட்டும் கல்வியில் கொஞ்சம் கவனமாக பாடங்களை படிப்பது மிகவும் நல்லது.

அது மட்டுமில்லாமல் படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். அது போலவே நீங்கள் வெளியில் செல்லும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இந்த நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும். உங்களுடைய செல்வாக்கும் செல்வமும் இன்று உயரும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |