கடகம் ராசி அன்பர்களே..!! இன்று தடைகள் விலகி செல்லும் நாளாக இருக்கும். தன வரவு திருப்திகரமாகவே இருக்கும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும். நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். இன்று கனவுகளால் தொல்லை கொஞ்சம் ஏற்பட கூடும். சரியான நேரத்திற்கு தூங்க செல்வது நல்லது. அது மட்டுமில்லாமல் உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். கவனமாக இருந்து கொள்ளுங்கள். பிள்ளைகளிடம் கொஞ்சம் அன்பாகவே நடந்துகொள்ளுங்கள். சேமிப்பு கொஞ்சம் கரையக் கூடிய சூழ்நிலையும் இருக்கும்.
மனைவி வழியில் உங்களுக்கு உதவிகள் உண்டாகும். அது மட்டுமில்லாமல் உங்கள் தேவைகளை அறிந்து மற்றவர்கள் உதவுவார்கள். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் வரும். வெளிநாடு செல்வதற்கு காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்திகள் வரும். அதுமட்டுமில்லாமல் அந்த முயற்சி உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். தந்தைவழி சொத்துக்களை கேட்டு வாங்க முயல்வீர்கள். பல சொத்துக்களையும் நீங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். இன்று சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். மற்றபடி இன்று எப்பொழுதும் போலவே குடும்பத்தில் மகிழ்ச்சிக்கும் கலகலப்புக்கும் எந்த குறையும் இருக்காது.
இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். கொஞ்சம் கவனமாக பாடங்களில் மட்டும் கவனம் செலுத்திப் படியுங்கள். அதுபோல பாடத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தைரியமாக எழுந்து நின்று ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையை சிறப்பாக்கி கொடுக்கும். தயவுசெய்து இதை முயற்சித்துப் பாருங்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்