கடகம் ராசி அன்பர்களே..!! இன்று தன வரவு கூடும் நாளாக இருக்கும். திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாகலாம். கல்வியில் நல்ல சிறப்பு அடையக்கூடும். நண்பர்களால் உதவி கிடைக்கும். சொந்த வீடு நிலம் அமையும். பிறருக்கு உதவும் எண்ணம் மேலோங்கும். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்துமே தீரும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.
வேலைப்பளு கொஞ்சம் குறையும். திறமையான பேச்சின் மூலம் சக ஊழியர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதிற்கு திருப்தியை கொடுக்கும். இன்று எல்லா வகையிலும் உங்களுக்கு நன்மை ஏற்படும். வானத்தில் செல்லும் பொழுது மட்டும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும் பார்த்துக்கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்