Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு… “மதிப்பும் மரியாதையும் உயரும்”… இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்..!!

கண்ணியமிக்க கடக ராசி அன்பர்களே..!! இன்று மதிப்பும் மரியாதையும் உயரும் நாளாக இருக்கும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் பொருள் வரவை பெருக்கிக் கொள்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். இடம் பூமியால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் வசதிகளும் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரத்திற்கு புதியதாக இடம் வாங்குவீர்கள். காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன்கள் இன்று கிடைக்கும்.

சிக்கனமாக நடந்துகொண்டு பெரியோர்களின் ஆதரவு பெருவீர்கள். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது முக்கியமான காரியத்தை செய்யும்போது ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை  எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான  திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |