கடகம் ராசி அன்பர்களே..!! எந்த விஷயத்திலும் நியாயமாக நடக்க வேண்டிய நாளாகவே இன்று இருக்கும். உடல் நிலையில் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். அஜீரண கோளாறு போன்றவை ஏற்படக்கூடும். வயிற்றில் உப்புசம் கொஞ்சம் இருக்கும். தயவு செய்து மனைவியிடம் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். மற்றவர்களிடம் பேசும் பொழுது பகை ஏற்படக்கூடிய சூழல் இருப்பதால் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். அதிகாரிகளிடம் பணிவாக நடந்து கொள்ளுங்கள். இன்று மன அமைதி இருக்கும். எல்லோரும் உங்களிடம் அன்பாக நடந்து கொள்வார்கள். திட புத்தியும் பல வழிகளில் உழைத்து சம்பாதிக்கும் திறமையும் ஏற்படும்.
இன்று பணவரவு எதிர்பார்த்ததைவிட கூடுதலாகத்தான் இருக்கும். உங்களுடைய பேச்சில் இனிமை சாதுரியத்தால் எடுத்த காரியத்தை திறம்படவும் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பணிச் சுமையை ஏற்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகளிடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும் பொழுது கவனமாக பேசுவது நல்லது. பணி நிமிர்த்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். பயணங்கள் உங்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். குடும்பத்தாருடன் எந்தவித கருத்து வேறுபாடுகள் இல்லாமல் கொஞ்சம் நிதானமாகப் பேசுங்கள் அது போதும்.
இன்றுமாணவக் கண்மணிகள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். அதுமட்டுமில்லாமல் விளையாட்டு துறையில் ஆர்வம் செல்லும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுப்பதற்கு நீங்கள் முயற்சி செய்யுங்கள். உங்களுடைய கர்ம தோசங்கள் அனைத்தும் நீங்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்