Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு… “சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும்”.. எந்த பொறுப்பையும் ஏற்க வேண்டாம்..!!

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாளாக இருக்கும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். எதிர்காலம் நலன் கருதி சில முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடும். பிரியமானவர்களுடன் பயணங்களை மேற்கொள்ளும்போது சற்று மன மகிழ்ச்சி  குறையும்படியான சூழல் உருவாகும் பார்த்துக்கொள்ளுங்கள். பேச்சில் மட்டும் நிதானத்தை செலுத்துங்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு ஏற்பட்டாலும் எப்படியாவது செய்து முடித்துவிட வேண்டுமென்று துணிச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். குடும்பத்தில் இருப்பவருடன் ஏதாவது ஒரு வகையில் வாக்குவாதம் வந்து செல்லும்.

பிள்ளைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொடுத்து திருப்தியும் அடைவீர்கள். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது கொஞ்சம் கவனமாக செய்யுங்கள். இன்று குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சி இருக்கும். வெளியிடங்களுக்கு சென்று பொழுதைக் கழிக்க கூடிய சூழலும் இருக்கும். ஆன்மீக சுற்றுலாக்களும் நீங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும்.

அது மட்டும் இல்லை இன்று சிவராத்திரி குபேர கிரிவலம் என்று சொல்வார்கள். குபேரர் பூமிக்கு வந்து திரு.அண்ணாமலையாரை தரிசித்து கிரிவலம் செல்லக்கூடிய நாள். இந்த நாளில் நாமும் குபேரர் உடன் கிரிவலம் சென்றால் ஏழு தலைமுறைக்கு நமக்கு செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பது ஐதீகம். ஆகையால் நாமும் குபேரரையும் திரு. அண்ணாமலையாரையும் தரிசித்து கிரிவலம் செல்வோம்.செல்வத்தை பெற்றுவிடுவோம். அப்படி கிரிவலம் செல்ல முடியாதவர்கள் மாலை 4 மணியிலிருந்து 6: 30  மணிக்குள் குபேரரையும்  நாம் வணங்கி திரு.அண்ணாமலையாரையும் மனதில் வழங்கினால்  செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். தயவு செய்து இதனை செய்வதற்கு நீங்கள் மறந்து விடாதீர்கள்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |