கடகம் ராசி அன்பர்களே..!! இன்று நட்பு மத்தியில் நீங்கள் மதிக்கப்படுவீர்கள். பணம் பல வழிகளில் வந்து பையை நிரப்பும். உறவுகளுக்கு இடையே இருந்த மனக்கசப்பு விலகிச்செல்லும். கோபத்தை மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள் அது போதும். இன்று வழக்கு விவகாரங்களில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். மன குழப்பம் விலகி தெளிவாக சூழ்நிலை ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். மாணவர்களுக்கு இன்று கூடுதலாக பொறுப்புக்கள் சேரும்.
கல்வியில் நாட்டம் அதிகரிக்கும் கவனமாக படியுங்கள் அது போதும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரிய கொண்டாட்டங்கள் இருக்கு.ம் கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் இருக்கட்டும். பணவரவு தாராளமாகவே இருக்கும். இன்று நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் மிக நேர்த்தியாக இருக்கும். மற்றவர்கள் உங்களைப் பார்த்து பொறாமைப்படகூடும்.
இன்று திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் பற்றிய பேச்சுவார்த்தை நடத்துங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். இன்று உங்களுக்கு நீல நிறம் சிறப்பு வாய்ந்த நிறமாக உள்ளது. நீல நிறத்தை பயன்படுத்தி இன்று முக்கியமான காரியத்தை மேற்கொள்ளுங்கள். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்தும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்