Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு… “உடன்பிறப்புக்களுக்கு உதவி செய்வீர்கள்”.. உங்களுக்கு ஆதரவு கிடைக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று செய்யும் காரியங்களில் மிகவும் நேர்த்தி இருக்கும். நல்லவர்களை சந்தித்து நலம் காணும் நாளாக இருக்கும். கொடுக்கல் வாங்கல்கள் திருப்திகரமாக இருக்கும். உடன்பிறப்புக்கள் கேட்ட உதவிகளை மறுக்காமல் செய்வீர்கள். நினைத்ததை சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நன்மையை கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படகூடும்.

பிள்ளைகளுக்காக செலவு செய்யவும் நேரிடும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். மற்றவர்கள் உதவி கிடைப்பதன் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். கலைத்துறையினர் திட்டமிட்டு காரியங்களை செய்து வெற்றி காண்பீர்கள். வீட்டிலும் வெளியிலும் உங்களது செயல்களுக்கு ஆதரவு கிடைக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். அதுமட்டுமில்லாமல் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

இன்று முக்கியமான பணியை  நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தர்ம தோஷங்கள் நீங்கி அனைத்து விதமான செல்வங்களும் ஏற்படும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |