Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு… “அறிமுகம் இல்லாதவரிடம் பேச வேண்டாம்”… பாராட்டுகள் குவியும்..!!

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று அறிமுகம் இல்லாதவரிடம் சொந்த விஷயத்தை பற்றி பேச வேண்டாம். தொழில் வியாபாரத்தில் இலக்கு நிறைவேற கொஞ்சம் காலதாமதம் பிடிக்கும். நிர்பந்தத்தின் பேரில் பொருட்கள் ஏதும் வாங்க வேண்டாம். தியானம் தெய்வ வழிபாடு மனம் நிம்மதி பெறுவதற்கு உதவும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும்.

அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கும். மேலிடத்தில் இருந்து பாராட்டுகள் குவியும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். இன்றைய நாள் துணிச்சல் கொஞ்சம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே மட்டும் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து செல்லும். கூடுமானவரை பொறுமையை மட்டும் கையாளுங்கள் அது போதும்.

இன்று மாணவ கண்மணிகளுக்கு நல்ல முன்னேற்றமான சூழல் இருக்கும். கல்வியில் ஆர்வம் மிகுந்து இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள், அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |