கடகம் ராசி அன்பர்களே…!!! இன்று பணி தாமதமாவதால் மனதில் சஞ்சலம் கொள்வீர்கள். நண்பரின் உதவி ஊக்கத்தைக் கொடுக்கும். தொழிலில் அளவான உற்பத்தி விற்பனை இருக்கும். புதிய இனங்களில் பணச்செலவு ஏற்படும். ஒவ்வாத உணவுகளை உண்பதை தவிர்க்கவும். இன்று எடுத்த வேலைகளை மிகச் சரியாக செய்து, நல்ல பெயர் எடுப்பீர்கள். குடும்பத்தில் இருந்த இறுக்கம் நீங்கி மனம் மகிழ்ச்சி அடையும் விதமாக இருக்கும்.
உறவினர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்னோன்யம் இருக்கும். குடும்பத்தை பொறுத்த வரை மகிழ்ச்சியான சூழல் தான் இருக்கும். வேலை இல்லாத நண்பர்களுக்கு வேலை வாய்ப்புக்கான உத்திரவாத கடிதம் வருவதற்கான சூழல் இருக்கு. இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாகவே இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் வெள்ளை நிறம் உங்களுக்கு சிறப்பை கொடுக்கும். நல்ல முன்னேற்றத்தையும் கொடுக்கும். இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : தெற்கு