கடக ராசி அன்பர்களே…!! இன்று மனதில் தைரியமும் மகிழ்ச்சியும் உங்களுக்கு ஏற்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு புதிய அனுபவத்தை கொடுப்பதாக இருக்கும். வீண் அலைச்சலை மட்டும் தவிர்ப்பது நல்லது. கூடுமானவரை செலவு செய்யும் பொழுது கொஞ்சம் நிதானமாக செலவு செய்யுங்கள். வரவுக்கு ஏற்ற செலவு இன்று இருக்கும். அதனால் எந்த பிரச்சனையும் இல்லை, இருந்தாலும் மனம் கொஞ்சம் அலைபாய கூடும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. இன்று அதிகாரமிக்க பதவியில் உள்ளவர்களை சந்திக்கக்கூடும். அதன் மூலம் உங்களுக்கு உதவிகள் கிடைத்து குடும்பத்தாரின் ஆதரவும் ஒத்துழைப்பும் இருக்கும்.
இன்று கடன்கள் மட்டும் தயவு செய்து வாங்க வேண்டாம். இந்த விஷயத்தில் ரொம்ப கவனமாக இருங்கள். தொழில் வியாபாரத்தை பொருத்தவரை ஓரளவு சிறப்பை கொடுக்கும். ஆனால் கூடுமானவரை இன்று நீங்கள் செய்யக்கூடிய விஷயங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். அதாவது ரகசியங்களை கூடுமான வரை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். ரொம்ப கவனமாக செயல்படுங்கள். உடல்நிலையை பொருத்தவரை உங்களுக்கு எந்தவிதமான மாற்றமும் இல்லை. ஓரளவு சிறப்பான சூழ்நிலையே நீடிக்கும். ஆனால் சரியான உணவுகளையும் நல்ல தரமான உணவுகளையும் எடுத்துக் கொள்ளுங்கள் அது போதும். இன்று கணவன் மனைவியை பொருத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லை.
சுகபோக வாழ்வு அமையும். அதே போல அக்கம்பக்கத்தினர் இடம் எந்தவித வாக்குவாதமும் இல்லாமல் சுமுகமான நிலையே காணப்படும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள் அது போதும். படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். மிகவும் சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : மேற்கு