அனைவரிடமும் கண்ணியமாக நடந்துக்கொள்ளும் கடகராசி அன்பர்களே..!! இன்று உங்கள் செயல்திறன் கண்டு சிலர் பொறாமை கொள்ளக் கூடும். பொறுமை காப்பதால் சிரமத்தை தவிர்க்கலாம். தொழில் வளர்ச்சி பெறுவதற்கு கூடுதலாகப் பணிபுரிவது அவசியமாகும். பணச்செலவு இன்று அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும் பொழுது மிதவேகத்தை பின்பற்றுங்கள். இன்று வீண் அலைச்சல் இருக்கும். மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலம் ஏற்படும். பகைகளில் வெற்றி கிடைக்கும். பண வரவுகள் தாராளமாகவே இருக்கும். கையிருப்பு கூடும். இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும். நீண்ட தூரப் பயணங்களால் லாபம் உண்டாகும். மனதில் தைரியம் பிறக்கும். உங்களுடைய வாக்கு வன்மையால் ஆதாயத்தை பெற்றுக்கொடுக்கும்.
உயர்மட்ட பதவியில் உள்ளவர்களின் உதவிகள் கிடைக்கும். அனைவரையும் கவரும் விதமாக இன்று நீங்கள் பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பு இருக்கும். மகிழ்ச்சியும் இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவதற்கு மட்டும் கொஞ்சம் பொறுமையாகவும் கல்வியில் கவனமாகவும் இருக்க வேண்டும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது முக்கியமான காரியத்தில் ஈடுபடும் போது வெள்ளை நிற ஆடையோ அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையோ எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அது போலவே நீங்கள் காலையில் எழுந்ததும் விநாயகரை வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் உங்களுக்கு அனைத்து காரியமும் சிறப்பாகவே இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்