Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு… “கோபத்தை கட்டுப் படுத்துங்கள்”.. பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்..!!

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று சூழ்நிலையை கவனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது. தொழிலில் அதிக உழைப்பால் உற்பத்தி விற்பனை சீராக தான் இருக்கும். சத்தான உணவுகளை உண்பதால் ஆரோக்கியமாக பலமாக காணப்படும். பெண்கள் தாய்வீட்டு உதவியை  கேட்டு பெறுவார்கள். இன்று பணவரவு எதிர்பார்த்ததை விட கொஞ்சம் குறைய கூடும். கடன் விஷயங்களில் தள்ளிப்போடுவது ரொம்ப நல்லது. புதிய நபர்களுக்கு பொருட்களை சப்ளை செய்யும் போது கொஞ்சம் கவனமாக செய்யுங்கள்.

கோபத்தை கட்டுப் படுத்துவதன் மூலம் காரியங்களை சாதகமாக செய்து முடிக்க முடியும். எதிர்பார்த்த தகவல் கொஞ்சம் தாமதப்படலாம். கூடுமானவரை இன்று நிதானத்தை மேற்கொள்ளுங்கள். முடிந்தால் சென்று வாருங்கள் மனம் அமைதியாக காணப்படும். இன்று குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே மட்டும் சிறியதாக வாக்குவாதம் வரக்கூடும். பொறுமையை கடைபிடியுங்கள். எதுவுமே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். இன்று மாணவ கண்மணிகள் உழையுங்கள். கொஞ்சம்  உழைத்து பாடங்களைப் படியுங்கள்.

ஆசிரியர்களின் சொல்படி நடந்து கொள்ளுங்கள். படித்த பாடத்தை எழுதிப்பாருங்கள். ரொம்ப சிறப்பாக காணப்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது காவி நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். காவி நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இல்லையேல் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு சிறப்பை கொடுப்பதாக இருக்கும். அதுபோலவே இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதம் கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் காவி நிறம்

Categories

Tech |