கடகம் ராசி அன்பர்களே..!! இன்று நல்ல சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாளாக இருக்கும். வரவு திருப்தி தரும். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் சிறப்பாகவே இருக்கும். மாற்று இனத்தவர்கள் கைகொடுத்து உதவிகளை செய்வார்கள். நண்பர்கள் சுப செய்திகளை கொடுப்பார்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கக்கூடும்.
வெளியூர் தகவல் நல்ல தகவலாக வந்து சேரும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். இன்றைய நாள் ஒரு பொன்னான நாளாகவே அமையும். அதுமட்டுமில்லாமல் இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்துகொண்டு செல்லுங்கள்.
நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்