கடகம் ராசி அன்பர்களே..!! இன்று கூட்டாளிகளால் கூடுதல் லாபம் கிடைக்க கூடிய சூழல் இருக்கும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். உங்கள் ஆலோசனைகள் மற்றவர்களுக்கு உறுதுணையாக இருக்கும். தொழில் தொடங்குவது பற்றிய சிந்தனை மேலோங்கும். இன்று தைரியமாக வீறு நடை போடுவீர்கள். உங்கள் வேலைகளை நீங்கள் சிறப்பாக செய்வீர்கள். வெப்பம் சம்பந்தப்பட்ட உடல் உபாதைகள் மற்றும் ஏற்படலாம்.
இதில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். அதேவேளையில் தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை மேலோங்கும். எனினும் வாழ்க்கை துணை வழியில் உள்ள உறவினருடன் கருத்து பரிமாற்றங்கள் செய்யும் பொழுது ரொம்ப கவனமாக இருங்கள், எச்சரிக்கையாக இருங்கள். இன்று மாணவச் செல்வங்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள்.
படித்த பாடத்தை எழுதி பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துமே சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் ; நீலம் மற்றும் சிவப்பு நிறம்