Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு… “குடும்பத்தில் மகிழ்ச்சி”… கணவன் – மனைவி பிரச்சனை தீரும்.!!

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். உறவினர்கள் நண்பர்கள் மனம் விட்டுப் பேசுவார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும்.

கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனை தீரும். பிள்ளைகள் பற்றிய கவலை இருக்கும் உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இன்றைய நாள் நல்ல முன்னேற்றம் உங்களுக்கு கிடைக்கும். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் எந்த பிரச்சினையும் இல்லை. நல்ல முன்னேற்றம் இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |