காதலில் வயப்படக்கூடிய கடக ராசி அன்பர்களே..!! இன்று மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணிகளை மீதியும் தொடர்வீர்கள் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் சின்ன சின்ன வாக்கு வாதத்தை மட்டும் தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நன்மையை கொடுக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை வேண்டும். வீண் பேச்சைக் குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் கொஞ்சம் இருக்கும். அடுத்தவருக்கு உதவி செய்யும்போது கவனம் வேண்டும்.
தொழில் வியாபாரிகளுக்கு லாபம் ஈட்டுவது இன்று சிறப்பான காலமாக இருக்கும். பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று மனம் மகிழ்வாக காணப்படும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியர்களிடம் பாராட்டுகளும் பெறக்கூடும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் -போது முக்கியமான காரியத்தை செய்யும்போது வெள்ளை நிற ஆடையோ அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையையோ எடுத்து செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். முடிந்தால் காலையில் எழுந்தவுடன் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குவது சிறப்பு. வெற்றி வாய்ப்புகள் வந்து குவியும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்