கடகம் ராசி அன்பர்களே..!! இன்று முன்னேற்றம் கூடும் நாளாக இருக்கும். முக்கிய புள்ளிகள் இன்று உங்களை சந்திக்க கூடும். பொருளாதார நலன் கருதி வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். சுற்றி இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சுப விரயங்கள் அதிகரிக்கும் .வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது ரொம்ப நல்லது. காரியங்களை செய்து முடிப்பதில் கடினமான நிலை காணப்படும்.
இன்று எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் கடின முயற்சியின் பேரில் தான் வெற்றி பெற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிரமமின்றி செய்து முடிப்பார்கள். பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். குடும்பத்தில் சகஜமான நிலை காணப்படும். சுமுக உறவு இருக்கும். கொடுக்கல் வாங்கலில் திருப்திகரமான சூழல் இருக்கும்.
ஆனால் கடன்கள் மட்டும் நீங்கள் வாங்க வேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்