Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு… “வாகனங்களில் செல்லும்போது கவனம்”… குடும்ப பிரச்சனைகள் தீரும்..!!

மற்றவர்களை ஆனந்தமாக வைத்துக் கொள்ளும் கடக ராசி அன்பர்களே..!! இன்று புதிய சொத்துக்கள் சேர்வதற்கான வாய்ப்புகள் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோரின் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களை கவர பரிசு திட்டங்களை அறிவிக்க கூடும். இன்று பயணங்களின்போதும், வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது கவனமாகவும்,  எச்சரிக்கையாகவும் இருங்கள். அது போலவே இன்று புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.  அவர்களிடம் கொஞ்சம் கவனமாக பழகுவது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாக காணப் பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும்.

வாடிக்கையாளரிடம் அனுசரித்து நிதானமாக நடந்து கொள்வது வியாபாரத்திற்கு நன்கு உதவும். இன்று நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள் குடும்பத்தாருடன் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். குடும்பத்தில் உள்ள சின்ன சின்ன பிரச்சனைகள் தீரும். மனம் மகிழ்வும் ஏற்படும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது நீல நிறத்தில் ஆடை அல்லது நீல நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் :  1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்

Categories

Tech |