துணிச்சலுக்கு பெயர் போன கடக ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் மனதில் அதிகமான எதிர்பார்ப்பு உருவாகும். தொழில் வியாபாரம் மந்த கதியில்தான் இயங்கும். அளவான பணவரவு இன்று கிடைக்கும். வெளியூர் பயணத்தில் மாறுதல்கள் ஏற்படக்கூடும். அதிகம் பயன் தராத பொருட்களை மட்டும் வாங்க வேண்டாம். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மையை கொடுக்கும். வியாபார பணத்திற்காக புதியதாக இடம் வாங்குவீர்கள். உத்யோகத்தில் கூடுதலாக பணிச் சுமையை ஏற்க வேண்டியிருக்கும். மேலதிகாரியிடம் உங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கும் போது கவனமாக பேசுவது நல்லது.
பணி நிமிர்த்தமாக பயணங்களும் செல்லலாம். அதனால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். லாபத்திற்கு எந்தவித குறையும் ஏற்படாது. இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைய கூடும். ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள். மாணவரிடம் பழகும் போது கொஞ்சம் கவனமாக பழகுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ சிவப்பு நிற ஆடை அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் 18-சித்தர்கள் உள்ள படத்தை வழிபடுவது மிகவும் நல்லது. சித்தர்கள் வழிபாடு இன்று உங்களுக்கு நன்மை செய்யக் கூடியதாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்