தனது இரு கண்களின் கவர்ச்சியால் அனைவரையும் கவரக்கூடிய கடகராசி அன்பர்களே..!! இன்று கடன் சுமை குறையும் நாளாக இருக்கும். காலை நேரத்திலேயே நல்ல தகவல்கள் வந்துசேரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதிய சொத்துக்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று புதிய வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வரக்கூடும். அரசியல்வாதிகளுக்கு அலைச்சல் கொஞ்சம் இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய சூழல் இருக்கும். உங்களுடைய எதிரிகள் மீது நீங்கள் ஆத்திரம் கொள்ள வேண்டாம், பொறுமையை மட்டும் கடைபிடியுங்கள்.
மாணவர்களுக்கு புதியதாக கல்வி பயில ஆனந்தம் ஏற்படும். நல்ல நட்பு வட்டாரமும் கிடைக்கும். சக மாணவரிடம் பழகும் போது கவனமாக பழகுங்கள். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை நநிற ஆடையோ அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையோ எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் சிறப்பாகவே நடக்கும். தயவுசெய்து இதை மட்டும் நீங்கள் செய்து பாருங்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் ஊதா நிறம்