Categories
உலக செய்திகள்

‘என்னால் நம்ப முடியவில்லை’…. ஒரேநாளில் பணக்காரரான கனடியர்…. பகிர்ந்துள்ள மகிழ்ச்சியான செய்தி….!!

லாட்டரியில் பரிசுத்தொகை விழுந்த கனடியர் மகிழ்ச்சியுடன் தனது நீண்டகால ஆசை குறித்து கூறியுள்ளார்.

கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்தவர் ட்ரோய் ஆல்பினெட். இவர் நீண்ட  நாட்களாகவே கனடாவில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு லாட்டரியில் 500,000 டாலர் பரிசுத்தொகை விழுந்துள்ளது. இது குறித்து ட்ரோய் ஆல்பினெட் கூறியதில் “என் வாழ்க்கையை இந்த பரிசுத்தொகை நிச்சயமாக மாற்றும்.

நான் வாடகை வீட்டில் தான் குடியிருக்கிறேன்.ஆனால் தற்பொழுது என்னால் சொந்தமாக வீடு வாங்க இயலும். மேலும் நான் பரிசு விழுந்ததை முதலில் நம்பவே இல்லை. ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்த பின்னரே நம்பினேன். நான் புதுவீடு வாங்குவது மட்டுமின்றி என் காரின் தரத்தையும் உயர்த்துவேன்” என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

Categories

Tech |