புலம்பெயர்வோருக்காக கனடாவில் பல்வேறு பயனளிக்கும் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன
கனடாவில் உள்ள Saskatchewan மாகாணத்தில் ஒருவர் புலம்பெயரவோ அல்லது பணி செய்யவோ விரும்பினால் அதற்கு பல வழிமுறைகள் உள்ளது. அதிலும் அங்கிருந்து வேலைவாய்ப்புகள் தொடர்பான அழைப்புகள் வராவிட்டாலும் புலம்பெயரலாம். அதற்காக சில திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று Provincial Nominee Programs (PNP) திட்டமாகும். இந்த திட்டத்தில் உள்ள மாகாணங்கள் பொருளாதார புலம்பெயர்வோரை வருடந்தோறும் நிரந்தர புகலிடத்திற்காக தேர்வு செய்கின்றனர். ஆனால் எல்லா மாகாணத்திலும் விதிமுறைகள் ஒன்று போல் இருக்காது.
மேலும் இத்திட்டத்தின் கீழ் கனடாவிற்கு புலம்பெயர்வோரை குறிப்பிட்ட மாகாணம் முதலில் தேர்வு செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து Saskatchewan Immigrant Nominee Program என்ற திட்டத்தின் மூலமும் இடம் பெயர முடியும். அதிலும் பணி தொடர்பாக அழைப்பு வராவிட்டாலும் இதன் மூலம் புலம்பெயரலாம். மேலும் இதனை போன்றே Saskatchewan Express Entry-linked stream திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இருப்பினும் இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் விண்ணப்பிக்க வேண்டுமெனில் federal Express Entry என்ற அமைப்பில் உங்களது சுயவிவரம் அதாவது profile இயக்கத்தில் இருக்க வேண்டும்.
மற்றொரு வழியாக Saskatchewan Occupation In-Demand stream திட்டம் உள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக கனடாவிற்கு சிறந்த பணியாளர்களை கொண்டு வருகின்றனர். இதற்காக நீங்கள் Express Entry profile அமைப்பை உருவாக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் நீங்கள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டுமெனில் Saskatchewan’s Occupations In-Demand list என்ற பட்டியலில் உள்ள ஏதேனும் பணியில் குறைந்தது ஒரு ஆண்டாவது வேலை புரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக இந்த நடப்பு ஆண்டில் Saskatchewan Express Entry திட்டத்தின் மூலமாக 2,733 பேருக்கும் Occupations In-Demand திட்டத்தின் வாயிலாக 3,433 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.