Categories
அரசியல்

விசிக சார்பில் வேட்பாளர் அறிவிப்பு…. திருமாவளவன் , ரவிக்குமார் போட்டி …!!

நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி  சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தொல்.திருமாவளவன் அறிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்  இடம்பெற்றுள்ளது . இதற்க்கு 1 மக்களவை தொகுதிகளும் , 1 மாநிலங்களவை தொகுதியும்  ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டு இருந்தது . இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின்  தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட செய்தியாளர்கள் சந்திப்பில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எவை எவை என்று அறிவித்தார் .

Image result for பொதுச்செயலாளர் ரவிக்குமார்

 

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு  சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . இந்நிலையில் விசிக  சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அக்கட்யின் தலைவர் திருமாவளவன் அறிவித்தார். இதில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தமிழகம் , கேரளா மற்றும் ஆந்திரா_வில் போட்டியிடுகின்றது என்று கூறிய தமிழகத்தில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடுகின்றது . சிதம்பரத்தில் வேட்பாளராக  திருமாவளவன் மற்றும் விழுப்புரத்தில்  பொதுச்செயலாளர் ரவிக்குமார் போட்டியிடுவார் என்று அறிவித்தார். மேலும் சிதம்பரத்தில் தனி சின்னத்திலும் விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்திலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் என்று திருமாவளவன் தெரிவித்தார்.

Categories

Tech |