காங்கிரஸ் கட்சியின் சார்பில் வட்டு எறியும் இந்திய வீராங்கனை கிருஷ்ண பூனியா ஜெய்ப்பூர் ஊரக தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
அதில் ராஜஸ்தான் மாநிலத்தின் தற்போதைய சடுல்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் கிருஷ்ண பூனியா பெயரும் இடம் பெற்றுள்ளது. இவர் வட்டு எறியும் விளையாட்டு வீராங்கனை ஆவார் . 3 முறை ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துக் கொண்ட இவர் கடந்த 2010_ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்று வட்டு எறிதலில் தங்கப்பதக்கம் வென்றார். இந்நிலையில் இவர் தற்போது ஜெய்ப்பூர் ஊரக தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.