Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில்… செலவினங்களை தாக்கல் செய்ய… கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் செலவின அறிக்கையை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. அதில் பல்வேறு வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். அவர்களின் தேர்தல் செலவினங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணயம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 72 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இதனையடுத்து ஜூன்2ஆம் தேதிக்குள் வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்குகளை தக்க ஆவணங்களுடன் அறிக்கையை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம்  உத்தரவிட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் வேட்பாளர்களின் செலவினங்களை பார்வையிட சௌரப் துபே, மிலன் ரூசெல் ஆகிய 2 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் உள்ள 72 வேட்பாளர்களில் 58 பேர் மட்டுமே செலவின அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். மேலும் தற்போது கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் தீவிரமாக உள்ளதால் செலவின அறிக்கை தாக்கல் செய்ய வேட்பாளர்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே வருகின்ற ஜூன் 30ஆம் தேதி வரை இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |