Categories
தேசிய செய்திகள்

கரும்பு தோட்டத்தில்…” 4 பேர்… ஒரு சிறுமி”… கொள்ளையடிக்க போன இடத்தில் நடந்த கொடூரம்..!!

உத்திரபிரதேசத்தின் சஹரன்பூர் மாவட்டத்தை சேர்ந்த நான்கு கொள்ளையர்கள் ஒரு வீட்டிற்குள் புகுந்து 4.67 லட்சம் கொள்ளை அடித்து விட்டு சிறுமியை பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த புதன்கிழமை இரவு ஒரு வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் உரிமையாளரை மிரட்டி 4.67 லட்சம் பணமும் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். பின்னர் சிறுமியை கடத்தி சென்று அருகிலுள்ள வயலில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

வியாழக்கிழமை காலை சிறுமி நினைவு திரும்பிய பின்னர் வயலிலிருந்து வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். பின்னர் பெற்றோர் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் இருவரை கைது செய்த நிலையில் மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

Categories

Tech |