Categories
திருப்பூர் மாநில செய்திகள்

திருப்பூரில் சானிடைசர் ஸ்பிரே சுரங்கப்பாதை – ஆட்சியர் விஜய கார்த்திகேயனுக்கு குவியும் பாராட்டுகள்!

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நிலையில் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்காக மக்கள் தினமும் வெளியே வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நாட்டிலேயே முதன் முறையாக திருப்பூரில் சானிடைசர் ஸ்பிரே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

தென்னம்பாளையம் என்ற பகுதியில் உள்ள காய்மறி மார்க்கெட்டில் ஆட்சியர் விஜய கார்த்திகேயன் அவர்கள் தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியோடு கிருமி நாசினி சுரங்கம் ஒன்றை அமைத்துள்ளார். 16 அடி நீளம், 5 அடி அகலம், 7 அடி உயரத்தில் அமைந்துள்ள சானிடைசர் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.

அந்த பாதையில் 1000 லிட்டர் கிருமி நாசினி மூலம் தொடர்ந்து 18 முதல் 20 மணி நேரம் தெளிக்கும் படி உருவாக்கப்பட்டது. மார்க்கெட்டுக்கு வரும் அனைத்து மக்களுக்கும் 3 முதல் 5 வினாடிகளில் இந்த பாதையில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இதனால் மார்க்கெட்டுக்கு வரும் மக்கள் கொரோனா வைரஸ் தொற்று இல்லாமல், வீடுகளுக்கு செல்கின்றனர். இந்த கிருமி நாசினி சுரங்கம்செயல்படும் விதத்தை ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த கிருமிநாசினி தெளிக்கும் பாதை முயற்சி அனைத்து தரப்பினரிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |