Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தீவிர ரோந்து பணி…. சிக்கிய மின்வாரிய ஊழியர்…. போலீஸ் நடவடிக்கை…!!

காவல்துறையினர் மின்வாரிய ஊழியரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி குடியாத்தம் பகுதியில் காவல்துறை அதிகாரிகளான லட்சுமி, மணிகண்டன், அத்திக், ஜலாலுதீன் ஆகியோர் திடீரென ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியே வந்த பைக்கை நிறுத்திச் சோதனை செய்துள்ளனர். அந்தச் சோதனையில் பைக்கிலிருந்த 250 கிராம் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கஞ்சா கடத்திய நபர் மின்வாரிய ஊழியரான யுவராஜ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் யுவராஜை கைது செய்ததோடு அவரது பைக்கை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |