Categories
சென்னை மாநில செய்திகள்

இனியும் சும்மா இருக்க முடியாது…! ”உடனே குளோஸ் பண்ணுங்க” அரசு திடீர் முடிவு ….!!

கொரோனா தொற்று தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து கோயம்பேடு சந்தை மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3023 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே 203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,458ஆக அதிகரித்துள்ளது.

6 நாட்களில் 888 பேருக்கு கொரோனா: 

தலைநகர் சென்னையில் கடந்த 6 நாட்களாக 103, 94, 138, 176, 174 ,203 என்ற எண்ணிக்கையில் மட்டும் 888 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு கொரோனாவின் கூடாரமாக மாறியுள்ளது. சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை மூலமாக அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

கோயம்பேடு மூலம் 321 பேருக்கு கொரோனா:

கோயம்பேடு காய்கறி சந்தை மூலமாக 8 மாவட்டங்களில் 321 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.கடலூரில் அதிகபட்சமாக 129 பேரும், விழுப்புரம் 76 பேரும், சென்னை 63 பேரும், அரியலூர் 43 பேரும், காஞ்சிபுரம் 7 பேரும், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோயம்பேடு மூடல்:

இதனை தொடர்ந்து இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றதில் கோயம்பேடு சந்தையை மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் பூந்தமல்லியில் உள்ள திருமழிசைக்கு சந்தையை மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தை மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அங்குள்ள சந்தை முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தடை செய்த பகுதியாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |