தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசிய நிகழ்ச்சியில், இன்று இருப்பதைவிட மிக மெலிந்த உருவமாக இருந்தவன் நான். அடியை தாங்கும் உடம்பு மட்டுமல்ல, அடி என்றால் எப்படி இருக்கும் என்று அறியாத நிலையில் இருந்தவன் நான். அப்பொழுது என் மேல் விழுந்த அடியை தாங்கி, அதன்பிறகு மன தைரியத்தை கொடுத்தவர்தான் நம்முடைய மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்கள்.
தன் உயிரையும் காத்து, என் உயிரையும் காத்த கருப்பு சட்டைக்காரர் என்னுடைய ஆசிரியர் அவர்கள். திக்கற்ற நிலையில் இருந்த நேரத்தில் தைரியத்தை, தெம்பை ஊட்டி இன்றைக்கு திராவிட மாடல் என்று சொல்லும் அளவிற்கு உணர்ச்சியை எனக்கு ஏற்படுத்தி தந்தவர் நம்முடைய ஆசிரியர்கள் தான்.
கொள்கையும், லட்சியமும் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் பாசமும், அன்பும் இருப்பதால்தான், இந்த திராவிட இயக்கத்தின் அடி கட்டுமானத்தை யாராலும், எந்த கொம்பனாலும் தொட்டு கூட பார்க்க முடியாது.