தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அக்கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போது, 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை நாங்கள் கட்டி கொடுக்கிறோம் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக சொன்னீர்கள். அந்த செங்களையும் பட்டத்து இளவரசர் தூக்கி சென்று விட்டாரா ? அந்த மருத்துவமனை என்ன ஆகிவிட்டது ? உ.பி என்று சொல்லுவோம்.
உபி என்றால் உடன்பிறப்புகள். ஒரு உடன்பிறப்பு சொன்னாரு…. தளபதி இந்த சங்கீஸ் தொல்லை தாங்க முடியவில்லை தளபதி என்று சொன்னார். இங்கேயும் போக முடியாம, குடும்பம், மகன், மருமகன், மனைவி இப்படி பண்ணுங்க ? அப்படி பண்ணுங்க ? கமிஷன் வருதுன்னு… இன்னொரு பக்கம் நம்ம சங்கீங்க.
இப்பதான் நம்ம ஆளுங்க வந்து இருக்காங்க. இப்பவே கதறுனா எப்படி ? இன்னும் டைம் வேற இருக்குது. முதலமைச்சருக்கு என்ன பண்றதுன்னு தெரியல ? என்னடா அவனுங்க கிட்ட இருந்து தப்பிச்சி ட்ரெயின்ல போலாம்னு பார்த்தா…. இங்கேயும் ஒரு உபி நம்மை பார்த்து தளபதி… இந்த சங்கீங்க தொல்லை தாங்க முடியல, கொஞ்சம் பார்த்து காப்பாத்துங்கன்னு சொல்றாங்க. அந்த அளவுக்கு முதலமைச்சர் பாத்தீங்கன்னா… அந்த அளவுக்கு கிடுக்கிப்பிடியில் மாட்டிக்கொண்டு இருக்கின்றார் என அண்ணாமலை விமர்சனம் செய்தார்.