கொரோனாவை வைரஸை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட முடியாது என்றும் ஃப்ளு போன்று இந்த தொற்று நோய் அடிக்கடி வரும் எனவும் சீனா மற்றும் அமெரிக்கா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா மனிதர்களிடையே வெகு காலம் நீடித்திருக்கும் என சீனாவின் நோய் கிருமி ஆய்வு கழக இயக்குனர் ஜின்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் சார்ஸ் வைரஸோடு ஒப்பிடும் பொது கொரோனா மிகவும் கொடிய வைரஸ் என அவர் தெரிவித்துள்ளார். அதேசமயம் அறிகுறி எதுவும் இல்லாமல் இந்த வைரஸ் பரவுவதால் மிக பெய்ய சவாலாக உள்ளது.
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தித்தப்பட்டுள்ளது என முன்பு கூறிய சீனாவில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு முன்னதாக கொரோனா வைரஸ் குளிர்காலம் வரும்போதெல்லாம் உச்சபட்ச தொற்றை ஏற்படுத்தும் என அமெரிக்காவின் தொற்று நோய் கழக இயக்குநர் அந்தோணி பவுசி – Anthony Fauci கூறியிருந்தார். இந்த கருத்தை குஜராத் இந்திய பொது சுகாதார கழகத்தின் இயக்குநர் திலீப் மாலவான்கர் (Dileep Mavalankar) ஒப்புக்கொண்டுள்ளார்.
நோய் அறிகுறிகள் இல்லாமல், வேகமாக பரவும் திறன் கொரானாவுக்கு இருப்பதால், மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் அது நீண்டகாலம் நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே, 180 நாடுகளை பாதித்த கொரோனாவில் இருந்து மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த ஃப்ளு போன்று வருடந்தோறும் வந்தால் நிலைமை மிகவும் மோசமாய் மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.