Categories
தேனி மாவட்ட செய்திகள்

லிப்ட் கொடுக்க முடியாது… கூலித்தொழிலாளிக்கு ஏற்பட்ட கதி… இளைஞர்கள் செய்த செயல்…!!

தேனி மாவட்டம் லிப்ட் கொடுக்க மறுத்த கூலித்தொழிலாளியை தாக்கிய 2 இளைஞர்களை கைது செய்த போலீசார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் கம்பம் மந்தையம்மன் கோவில் தெருவில் மணிமாறன்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது உதயம் நகர் சந்திப்பு அருகே சென்றுகொண்டிருந்த போது க.புதுப்பட்டியை சேர்ந்த ராஜேஷ்(19) என்ற இளைஞன் மணிமாறன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி லிப்ட் கேட்டுள்ளார். இதற்கு மணிமாறன் மறுத்ததால் ஆத்திரமடைந்த ராஜேஷ் அருகில் இருந்த கல்லால் அவரை தாக்கியுள்ளார்.

இதனையடுத்து ராஜேஷ் அவரது நண்பர்களான சதீஷ்குமார் மற்றும் சசிகுமாரை வரவழைத்து 3 பேரும் இணைத்து மணிமாறனை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனைத்தொடர்ந்து படுகாயமடைந்த மணிமாறனை அங்கிருந்தவர்கள் மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து அவர் கம்பம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படியில் காவல்துறையினர் ராஜேஷ் மற்றும் சசிகுமார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ள நிலையில் தலைமறைவான சதீஷ்குமாரை தேடி வருகின்றனர்.

Categories

Tech |