தேனி மாவட்டத்தில் வீட்டின் கதவை உடைத்து 1 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் கம்பத்தை அடுத்துள்ள சாமாண்டிபுரத்தில் வசித்து வந்தவர் வினோத்குமார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வினோத்குமாருக்கு திருமணமாகியுள்ள நிலையில் அவரது மனைவியுடன் உத்தமபாளையம் அருகில் உள்ள கோவிந்தன்பட்டியில் அவரது மாமனார் வீட்டில் குடியிருந்து வந்துள்ளார். இதனையடுத்து கொரோனா ஊரடங்கால் வேலை இல்லாத காரணத்தினால் வினோத்குமார் அவரது மனைவியுடன் சொந்த ஊரான சாமாண்டிபுரத்திற்கு சென்றுள்ளார்.
இதனை அறிந்த மர்ம நபர்கள் வினோத்குமாரின் வீட்டு கதவை உடைத்து பீரோவில் இருந்த 1 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து வினோத்குமாரின் வீடு திறந்திருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த வினோத் குமார் வீட்டிற்கு சென்று பார்க்கையில் பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் அங்கங்கே சிதறி இருந்துள்ளனர். இது குறித்து அவர் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.