Categories
அரசியல் மாநில செய்திகள்

கழுத்துல செயின் போட முடில… கைல போன் எடுக்க முடில… மயக்கம் வருவதாக EXநிர்வாகி புலம்பல் ..!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய  சி.ஆர் சரஸ்வதி, பெண்கள் எல்லாம் பார்க்கும் பொழுது இன்னைக்கு வீட்டிலிருந்து வெளியே வரதே சிரமம். விக்கிற விலைவாசியில, தமிழ்நாடு இருக்கிற நிலைமைல, கழுத்துல செயின் போட்டு போக முடியாது, கைல போன் எடுத்துட்டு போக முடியாது,

ராத்திரி வெளியில போக முடியாது, விடிய காலைல வாக்கிங் போக முடியாது. அப்பேர்பட்ட ஒரு விடியல் ஆட்சி இன்றைக்கு தமிழ்நாட்டில் நடந்திட்டு இருக்கும்போது,  இந்த விடியலுக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்பா…  நிச்சயமாக, உண்மையான நல்ல ஆட்சியை நாங்கள் கொண்டு வருவோம், போராடுவோம் என்று போர்க்களத்தில் இருக்கக்கூடிய மக்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருக்கக்கூடிய மக்கள்.

ஒன்று மட்டும் வரலாறுல உண்டு..  திமுக ஆட்சிக்கு வந்தால் ஒன்று மின்சாரமே இருக்காது, அம்மா இருக்கும்போதே பார்த்தோம். பதினாறு மணி நேரம், 18 மணி நேரம்  மின்வெட்டு இருக்கும். இப்போ கொஞ்சம் மாறி,  மின்சாரம் இல்லாதது போக மின்சாரம்னு சொன்னாலே..  மயக்கம் வர அளவுக்கு…  ஷாக் அடிக்கக்கூடிய அளவுக்கு வரக்கூடிய மின் கட்டணத்தை நெனச்சா தான் கவலையா இருக்கு என தெரிவித்தார்.

Categories

Tech |